டெல்லி: இலவச அரசு நிலத்தில் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஏன் இலவசமாக கொரோனா சிகிச்சையை வழங்க முடியாதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆகும் செலவுகள் பற்றி சச்சின் ஜெயின் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
கொரோனா சிசிக்சைக்காக தனியார் மருத்துவமனைகள் அதிக பணம் வசூல் செய்கின்றன. அது தொடர்பான செய்திகள் நாள்தோறும் பத்திரிகைகளில் வெளியாகின்றன. நாடு தொற்றுநோய்க்கு எதிராக போராடும் போது, பொது நிலத்தில் இயங்கும் அல்லது அந்த பிரிவின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்.
மற்ற தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரினார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ். போவிட்னா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இலவச அரசு நிலத்தில் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகள் ஏன் இலவசமாக கொரோனா சிகிச்சையை வழங்க முடியாதா? இந்த மனுவுக்கு ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.