ராய்ப்பூர்:
டல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி  இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சத்திஸ்கர் மாநில முதல் முதலமைச்சர் அஜித்ஜோகி.  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான அஜித் ஜோகிக்கு (வயது 74)  கடந்த ஏப்ரல் மாதம் 9ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல், கோமா நிலைக்கு சென்றவருக்கு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தத. இந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவரது முறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநில சபாநாயகர் டாக்டர் சி.பி.ஜோஷி, வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகி ஜி காலமானதற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.  இந்த இழப்பைச் சுமக்க கடவுள் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் பலத்தை அளிக்கட்டும், அவருடைய ஆத்மா அமைதியுடன் இருக்கட்டும் என தெரிவித்து உள்ளார்.