டில்லி

தேர்தல் சின்னங்கள் குறித்து பாரத ராஷ்டிர சமிதி அளித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்த கட்சியின் தேர்தல் சின்னம் கார் சின்னம் ஆகும்.  இம்மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு கார் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே வேளையில் மற்ற கட்சிகளுக்கு இதைப் போலவே இருக்கக் கூடிய மற்ற சின்னங்களை ஒதுக்கியதாக புகார் எழுந்தது.   அதாவது ரோட் எஞ்சின் மற்றும் சப்பாத்திக் கல் – குழவி சின்னங்களுக்கும் கார் சின்னம் போலவே தோற்றம் அளிப்பதாகப் பாரத ராஷ்டிர சமிதி கட்சி கருதியது.

எனவே பாரத ராஷ்டிர சமிதி கட்சி இந்த சட்ட மன்ற தேர்தலில் தங்களது கார் சின்னத்தைப் போலத் தோற்றம் கொண்ட மற்ர சின்னங்களை வேறு சில கட்சிகளுக்கு ஒதுக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தது.  இந்த மனுவின் மீது விசாரணை செய்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தனர். 

 

அந்த தீர்ப்பில் இந்திய வாக்காளர்கள் சின்னங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கூட கவனிக்க முடியாத அளவுக்குத் திறனற்றவர்கள் எனப் பாரத ராஷ்டிர சமிதி கட்சியினர் நினைக்கின்றனரா எனக் கேள்வி கேட்டது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.