லண்டன்:

ந்தியாவில் கடன்பெற்று, அதை அடைக்காமல் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை, லண்டன் நீதிமன்றம் நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது.

எஸ்பி.ஐ உள்பட பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் பெற்று மோசடி செய்துவிட்டு இங்கிலாந்து தப்பிச்சென்று, அங்கு குடியுரிமை பெற்று வாழ்ந்து வருபவர் விஜய் மல்லையா. இவர்மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு மற்றும் பிடிவாரண்டு உள்ள நிலையில், தேடப்பட்டு வரும் குற்றவாளியாக சிபிஐ வழக்கு பதிவு செய்து, அவரை இந்தியா கொண்டு வர முயற்சிமேற்கொள்ளப்பட்டது.

இதில் அவரை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது . ஜாமின் பெற்று இங்கிலாந்தில் வசித்து வருகிறார் விஜய் மல்லையா.

இந்த நிலையில், தனது விவகாரத்தில்  எஸ்பிஐ வழக்கறிஞர்கள் சுயவிளம்பரத்துக்காக மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர் டிவிட் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், எஸ்பிஐ இங்கிலாந்து வழக்கறிஞர்கள்  தனக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சாதனைப் புத்தகம் வெளியிட்டுள்ளனர் என்றும் விமர்சனம் செய்துள்ள மல்லையா,அதற்கு செலவிட்டுள்ள தொகை இந்திய மக்களின் வரிப்பணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்பிஐ இங்கிலாந்து வழக்கறிஞர்கள் தங்களது சுய விளம்பரத்துக்காக இவற்றை செய்துள்ளனர் என்றும், இது தொடர்பாக வங்கி விளக்கம் அளிக்க வேண்டும் கூறியுள்ளார்.

மேலும் எனது 50 சதவிகித சொத்துக்கள் விற்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள விஜய்மல்லையா, இன்னும் மீதமுள்ள சொத்துக்கள் விற்கப்படுவதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்று தெரிவிதுள்ளவர்,  இங்கிலாந்தில் உள்ள எஸ்பிஐ  வழக்கறிஞர்கள் பணக்காரர்களா?  என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இங்கிலாந்தில் என்னிடம் இருந்து பணத்தை மீட்டுக் கொள்ளும் சட்டப் பரீட்சைக்கு எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதில் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் யாரேனும் கேள்வி எழுப்பி உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பி இருப்பவர்,  நான் 100 சதவிகிதம் கடனை திருப்பி செலுத்துவதாக கூறியபோது  ஏன் நடவடிககை எடுக்க வில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.