ரகசிய வாக்கெடுப்பை சபாநாயகர் அனுமதித்திருக்கவேண்டும்: மார்கண்டேய கட்ஜூ

Must read

 

சென்னை: 

தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறி உள்ளார்

கடும் எதிர்பார்ப்புக்கு இடையில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது.  அதையடுத்து சபையில் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கை, மைக் உடைக்கப்பட்டது. இதனால் 2 முறை சபை ஒத்திவைக்கபட்டது.தி.மு.க உறுப்பினர்கள் கட்டாயமாக வெளியேற்றபட்டனர்.

தமிழக சட்டசபை நிக்ழ்வுகள் குறித்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விமர்சனம்  செய்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் சரியாக செயல்படவில்லை. 11 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது என கூறி உள்ளார்.

 

More articles

Latest article