சென்னை:
கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்கு பின் துரிதமாக செயல்படுவதாக தெரிவிப்பதா? என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்கொல்லி நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிசன் உற்பத்தியும் அதிகரிக்கிறது. எனவே தற்போது மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி ஒன்றுக்கு வைத்துள்ளது. அதன்படி பரவத் தொடங்கி 14 மாதங்கள் கழிந்த பின் துரிதமாக செயல்படுவதாக கூறுவதா? என்று மத்திய அரசுக்கு கேள்வி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். கொரோனா குறைவை தடுக்க நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் தரப்பில் கூறப்படுகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்க டெண்டர் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது அலை என்பது எதிர்பாராதது, போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று திட்டமிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் அவ்வப்போது நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது எனவும் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.