சென்னை:

றந்தாங்கி அருகே ஆழ்துறை கிணற்றில் சிக்கி உள்ள குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது. மீட்பு பணிகள் 15 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது… இதற்கிடையில், சமூக வலைதளங்களில் #SaveSujith….#PrayforSujit…. ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது…

கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்புகும் பணி நேற்று இரவு முதல் தொடர்ந்து வருகிறது. மதுரை மணிகண்டன் குழுவினர் அவரது இயந்திரம் மூலம், ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் கையில் கட்டி மீட்கும் பணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக, 20 ஆடி ஆழத்தில் சிக்கிய குழந்தை மேலும் கீழே இறங்கி 70அடி ஆழத்திற்கு சென்றுள்ளது.

குழந்தைகள் மருத்துவர்கள் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தி வருகின்றனர். அவரை மீட்கும் முயற்சி தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.  சென்னை நங்க நல்லூரை சேர்ந்த குழுவினரின் பிரத்தியேக கருவி மூலம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் முயற்சியும் வெற்றிபெறாத நிலையில்,  மணப்பாறை பூலாம்பட்டியை சேர்ந்த குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

மீட்பு குழுவின் எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்காததால் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டும் பணி தீவிரம். சுஜித் சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் பணி தீவிரம்..