அரசியலில் குதிக்க திட்டம் : மே.வங்க ஆளுநருடன் கங்குலி திடீர் சந்திப்பு…

Must read

 

கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, மே.வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கரை கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று சந்தித்து பேசினார்.

இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக சவுரவ் கங்குலி முன்னிறுத்தப்படுவார் என செய்திகள் வெளியாகி உள்ள நிலையில். கங்குலி, ஆளுநர் ஜெகதீப் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் ஜெகதீப் தங்கர் “கங்குலியும், நானும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம்” என்று தெரிவித்தார்.

“கிரிக்கெட் குறித்து மட்டும் நாங்கள் பேசினோம்” என்று கங்குலி கூறியுள்ளார்.

– பா. பாரதி

More articles

Latest article