இஸ்தான்புல்
சவுதி இளவரசரின் பாகிஸ்தான் பயணத் தேதி முடிவு செய்யப்படும் முன்னரே அவரது சொந்த தேவைக்கான பொருட்கள் 5 டிரக்குகளில் வந்துள்ளன.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரும் 19 ஆம் தேதி இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக வருகிறார். அதை அடுத்து அவர் பாகிஸ்தானுக்கும் இரு நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் பாகிஸ்தான் வரும் தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த விவரம் அறிவிக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இளவரசரின் சொந்த தேவைக்கான பொருட்கள் 5 டிரக்குகள் மூலமாக இஸ்தான்புல் வந்து சேர்ந்துள்ளன. இந்த பொருட்களில் அவருடைய உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் ஃபர்னிச்சர்கள் உள்ளதாக பாகிஸ்தான் செய்தி ஊடகமான டான் வெளியிட்டுள்ள செய்தியில் காணப்படுகிறது.
இளவரசர் வருகைக்கு முன்பாகவே அவரது பாதுகாப்புப் படையினர் மற்றும் சவுதி ஊடகவியலாளர்கள் பாகிஸ்தான் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் முறையாக பாகிஸ்தான் வர உள்ள இளவரசர் பிரதமர் மாளிகையில் இரு நாட்கள் தங்குவார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இஸ்தான்புலில் உள்ள இரு ஸ்டார் ஓட்டல்களில் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் இரதமர் இம்ரான் கான் மற்றும் ராணுவ அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.