செவ்வாய் கிரகம் சென்று வர செலவு எவ்வளவு தெரியுமா?

Must read

நியூயார்க்

செவ்வாய் கிரகப் பயணத்தை நடத்த உள்ளதாக சொன்ன எலன் மஸ்க் நிறுவனம் அதற்கு செலவழிக்க வேண்டிய தொகை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் செவ்வாய் கிரகம் ஆகும். பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் செல்ல சுமார் 3 முதல் ஆறு மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்லப் போவதாக எலோன் மஸ்க் என்னும் நிறுவனம் அறிவித்தது. அதற்காக சிறப்பு விண்கலன்கள் அமைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

அந்நிறுவனம் அமைக்க உள்ள ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்கலத்தில் சுமார் 100 பேர்கள் வரை செவ்வாய் கிரகம் வரை அல்லது அதைத் தாண்டி பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள்து. அத்துடன் இந்த விண்கலத்தை வடிவமக்க 6.2 கோடி அமெரிக்க டாலர்கள் செலவாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது 431.61 கோடி ரூபாய்கள் ஆகும்.

அத்துடன் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செய்ய நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 5 லட்சம் டாலர்கள் அதாவது ரூ, 3.52 கோடி ரூபாய்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகம் மனிதர்கள் வசிக்க ஏதுவானது இல்லை. அங்கு தங்க தனித்தன்மை வாய்ந்த குடியிருப்புக்கள் அமைக்க வேண்டும். அந்த கிரகத்தில் மனிதர்கள் எளிதாக இறங்க முடியாது. மேலும் அங்கு சென்று திரும்பி வருவது சாத்தியமில்லை என்பதால் மரணத்துக்கு தயாராக இருப்பவர்கள் மட்டுமே அங்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article