வாஷிங்டன்

மெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் சௌதியின் பள்ளிப் பாடத் திட்டங்கள் தீவிரவாதத்துக்கு எதிராக மாற்றி அமைப்படும் என தெரிவித்துள்ளார்.

சௌதி அரேபியாவில் தற்போது பல மாறுதல்களை அரசு செய்து வருகிறது.   பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் வகையில் அவர்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமம்,  ஆண்களுக்கு சமமாக ஊதியம் ஆகியவைகளை அளிக்க உள்ளது.   அத்துடன் தற்போது அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் அகமது ஒரு அறிவிப்பு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த அறிவிப்பில், “சௌதி அரேபிய அரசு தீவிரவாதத்தி எதிர்க்கும் வகையில் பள்ளிப் பாடத் திட்டங்கள் அமைக்கப் பட உள்ளது.   தடை செய்யப்பட்ட இஸ்லாமிய சகோதர இயக்கங்களின் பிரச்சாரங்கள் உள்ள பாடங்கள் நீக்கப்பட உள்ளது.   அத்துடன் இஸ்லாமிய சகோதரர்களின் தீவிர வாத கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள் அனைத்து பள்ளிகலிலும், பல்கலைக்கழகங்களிலும் தடை செய்யப்பட உள்ளது” என இளவரசர் தெரிவித்துள்ளார்.