சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் அடுத்த வாரம் இந்தியா வருகை

டில்லி

வுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவில் அடுத்த வாரம் இரண்டு நாள் சுற்றுப் பயணம் செய்கிறார்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரும் ஆவார். அத்துடன் சவுதி அமைச்சரவையின் துணைத் தலைவர் பதவியையும் இவர் வசித்து வருகிறார். இவர் பதவி ஏற்றபிறகு அனைத்து நாடுகளுடனும் குறிப்பாக இந்தியாவுடன் மின்சக்தி, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இணக்கமாக நடந்துக் கொள்கிறார்.

முகமது பின் சல்மான் அடுத்த வாரம் இரு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வர உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 19ஆம் தேதி அவர் இந்தியாவுக்கு தனது முதல் வருகையை நிகழ்த்த உள்ளார். தனது பயணத்தின் போது சவுதி இளவரசர் பிரதமர் மோடியுடன் இரு நாட்டு நலன் குறித்த பல விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்

அத்துடன் அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவையும் சந்திக்கிறார், கடந்த 2016 ஆம் வருடம் சவுதி அரேபியா சென்ற இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இளவரசர் இப்போது இரு நாள் சுற்றுப்பயணம் வந்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2 days, India travel, Modi invited, Saudi crown prince, இந்தியா வருகை, இரு நாள் சுற்று பயணம், சவுதி பட்டத்து இளவரசர்
-=-