க்னோ

க்னோ விமான நிலையத்தில் இருந்து அலகாபாத் செல்ல இருந்த அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட  விவகாரம் அவர் கட்சியினரிடைய கடும் கோபத்தை உண்டாக்கி இருக்கிறது

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணியால் பாஜகவுக்கு சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக உ பி மாநில செய்தி ஊடகங்கள் தெரிவித்தன. அது பாஜக வட்டாரத்தில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது,

நேற்று அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் இருந்து அலகாபாத் செல்ல திட்டமிட்டிருந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க கூட்டம் ஒன்றில் அவர் கலந்துக் கொள்ளவிருந்தார். இந்நிலையில் அவரை அலகாபாத் செல்லக் கூடாது என விமான நிலைய அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதற்கான சரியான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை என அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார்.

அதிகாரிகள் தரப்பில் அலகாபாத் பல்கலைக்கழகம் இது போன்ற அரசியல் விழா நடத்த் மாணவர் சங்கத்துக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் இதனால் அமைதிக்கு பங்கம் விளையும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது அலகாபாத் நகரில் கும்பமேளா நடைபெற்று வருவதால் அமைதிக்கு பங்கம் விளைவிக்கலாம் என கருதப்ப்டும் நிகழ்வுகள் எதையும் அனுமதிப்பதில்லை எனவும் கூறி உள்ளனர்.

இது குறித்து அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரியான காரணங்கள் கூறாமல் என்னை விமானம் ஏறும் போது தடுத்து அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர். சரியான காரணங்களுக்காக என்னை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இருந்தால் அல்லது எனது நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யச் சொல்லி காவல்துறையினர் முன்பே கேட்டுக் கொண்டிருந்தால் நானே அதை செய்திருப்பேன். ஆனால் வேண்டுமென்றே தற்போது என்னை தடுத்தது மிகவும் தவறானது: என தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் இதனால் கடும் கோபம் அடைந்துள்ளனர்.  அவர்கள் விமான நிலயத்தின் வெளிப்புறம் கடும் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இந்த போராட்டத்தில் பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த போராட்டம் அலகாபாத், ஜவுன்பூர், ஜான்சி, கனவுஜ், பலராம்பூர், ஜலவுன் மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பரவி உள்ளது.

அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்டதை அவர் கூட்டணிக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கடுமையாக கண்டித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில் இது ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும் பாஜக அரசு தங்கள் கூட்டணியைக் கண்டு பயந்துள்ள்ளதை வெளிக்காட்டுவதாகவும் பதிந்துள்ளார்.