ரியாத்:

வூதி அரேபியாவில் வெளிநாட்டினர் பணி புரிய தடை விதிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக 30 லட்சம் இந்தியர்களி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

சவூதி அரேபியாவில், கார், பைக், கட்டுமானம் உள்பட 12 துறைகளில் வெளிநாட்டினர் பணிபுரிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 2 கோடி வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக, அங்கு பணியாற்றி வரும் 30லடசத்திற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்களின் வேலையும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு, சவுதி அரசு  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி,  வாகன ஷோரூம்கள், ஆயத்த ஆடைகள் விற்பனையகங்கள், வீடு மற்றும் அலுவலக மரச்சாமான்கள் விற்பனை யகங்கள், வீட்டு உபகரணங்கள் , பாத்திரக் கடைகள் போன்றவற்றில் வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தகூடாது என்று என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  செப்டம்பர் 11ஆம் தேதி முதல் வெளிநாட்டினரை பணியமர்த்த தடை விதிக்கப்படுகிறது.

மேலும்,  நவம்பர் 9ம் தேதி முதல், மின்னணு சாதனங்கள் கடைகள், கை மற்றும் சுவர்க் கடிகார விற்பனையகங்கள், கண் கண்ணாடி விற்பனையகங்களில் வெளிநாட்டினர் பணியமர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும்,

அடுத்த ஆண்டு ஜனவரி 7ந்தேதி முதல்,  மருத்துவ உபகரணங்கள்,  கட்டுமான பொருட்கள் விற்பனையகங்கள், வாகன உதிரி பாகங்கள் கடைகள், தரைவிரிப்பு கடைகள், இனிப்புக் கடைகளில் போன்றவற்றில் பணி அமர்த்வோ, ஏற்கனவே அந்த பணிகளில் இருப்பவர்கள், அதன்பிறகு தொடர்ந்து அதே பணியை செய்யவோ முடியாத வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சவூதி அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, அங்கு பணியாற்றி வரும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர்.

சவூதியில் இந்தியாவை சேர்ந்த 30 லட்சத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில், தற்போது சவூதி அரசு விதித்துள்ள புதிய தடை காரணமாக, அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.