ரியாத், 

உலகின் பிரமாண்டமான முதல் பொழுதுபோக்கு நகரை நிர்மாணிக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

தலைநகர் ரியாத் அருகில் இந்த நகரை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விஷன் 2030 என்று பெயிரிடப்பட்ட இத்திட்டத்தை அந்நாட்டு இளவரசர் முகம்மது பின் சல்மான் கடந்த ஆண்டு அறிவித்தார். அடுத்தாண்டு தொடக்கத்தில் கட்டடப் பணிகள் தொடங்கி 2022 ம் ஆண்டு முடிவடைகிறது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதோடு அருகிலிருக்கும் தலைநகர் ரியாத்தில் வசிப்பவர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு நகரமாக இருக்கும்.

மாசு இல்லாத காற்று, இயற்கையான சுற்றுச்சூழல் இருக்கும் வகையில் இந்நகரம் வடிவமைக்கப்படுகிறது.

மொத்தத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் வகையில் இந்த நகரம் பிரமாண்டமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

இந்த நகரம் 334 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து லாஸ் வேகாஸ் நகரைப் போல் காட்சியளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் ரோலர் கோஸ்டர்கள் மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட உள்ளது.

இது உலகிலேயே பெரியதாக இருக்கும். மேலும்,  மனிதர்கள் வாகனங்களில் சென்று வனவிலங்குகளை அருகில் கண்டு ரசிக்கும் சவாரி பார்க் என்ற விலங்கியல் பூங்காவும் மிகப்பெரிய அளவில் இங்கு அமைக்கப்பட உள்ளது.