சவுதி அரேபியா-வின் மெக்கா பிராந்தியத்தில் உள்ள ஜெத்தா, ராபிக், க்ஹுலைஸ் ஆகிய பகுதிகளில் அதிகனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேகவெடிப்பு காரணமாக 10 மணி நேரத்தில் 246 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய நீரில் கார்கள் அடித்துச் செல்லப்பட்டது.
வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மெக்கா பிராந்தியத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய்யம் தெரிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜெத்தா விமான நிலையத்திற்கு வர வேண்டிய பல விமானங்கள் இதனால் தாமதமானது சில விமானங்கள் 5 மணி நேரம் வரை தாமதமானதாகக் கூறப்படுகிறது.