பினாங்: 25ஆண்டு அரசியல் போராட்டத்துக்கு பிறகு மலேசிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ரஹிம் தேர்வு செய்யப்பட்டு  உள்ளார். மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து, இன்று மாலையில் நாட்டின் 10-வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவி ஏற்க உள்ளார்.

மலேசியால் நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டி நிலவியது. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்குத் தேவையான 112 இடங்களில் அன்வர் இப்ராஹிமின் பக்கதான் ஹரப்பான் கூட்டணிக்கு 82 இடங்கள்தான் கிடைத்தன. ஆனால், முன்னாள் பிரதமரான முகைதீன் யாசினின் மலாய் முஸ்லிம் பெரிகத்தான் நேஷனல் (பிஎன்)கூட்டணிக்கு 73 இடங்கள் கிடைத்தது. அதன் கூட்டணிக் கட்சியான பான் மலேசியா முஸ்லிம் கட்சி 49 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது தலைமையிலான கூட்டணி படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. முகைதீன் யாசின், அன்வர் இப்ராஹி்ம் இருவரில் யாருக்கு பிரதமர் வாய்ப்புக் கிடைக்கும், யாரை ஆட்சிஅமைக்க மன்னர் அழைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில், அன்வர் இப்ராஹிம் கட்சிக்கு சிறிய கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அவரை பிரதமராகத் தேர்வு செய்து மன்னர் உத்தரவிட்டார். அதன்படி,  மலேசியா நாட்டின் புதிய பிரதமராக சீர்திருத்தவாதியும், எதிர்க்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராஹிம் இன்று மாலை பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

அன்வர் இப்ராஹிம், மலேசியாவில் முஸ்லிம் இளைஞர் அமைபைப்பைத் தொடங்கி, கடந்த 1971ம் ஆண்டு மலேசியாவில் கிராமப்புற வறுமை மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக இப்ராஹிம பெரியஅளவில் போராட்டத்தை நடத்தினார். பின்னர் அவர்  ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பில் சேர்ந்தார்.. அதன்பின் இப்ராஹிமின் அரசியல் வாழ்க்கை வேகமாக நகர்ந்தது. நிதிஅமைச்சராக, துணைப் பிரதமராக இப்ராஹிம் உயர்ந்தார். அப்போது அவர்மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்தன.  1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 25 ஆண்டு காலம் அவரது அரசியல் வார்க்கையில் பல்வேறு சீர்திருத்தங் களும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன. சுமார்  25 ஆண்டுகால அரசியல்  போராட்டத்துக்குப்பின் தற்போது அன்வர் இப்ராஹிமுக்கு பிரதமர் பதவி கிடைத்துள்ளது.