நீலகிரி

ன்று மாலை சசிகலா 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு பங்களாவுக்கு வருகை தருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதையொட்டி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ், ஜிஜின், திபு, ஜம்சீர் உள்ளிட்ட 11 பேரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி காவல்துறை வழக்கை விசாரித்து வருகிறது.

இங்கே கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் தங்கியிருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு சசிகலா அங்கு செல்லாமல் இருந்தார்.

இன்று மாலை 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு பங்களாவிற்கு வருகிறார். அவர் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம், சிலை அமைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காகச் சென்னையில் இருந்து கோடநாட்டுக்குப் புறப்பட்டுள்ளார். சசிகலா இன்று கோடநாடு பங்களாவில் தங்க உள்ளார்.