2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கான மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.