சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை! அமைச்சர் ஜெயக்குமார்

Must read

சென்னை: சசிகலா, தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது என  அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கி, அதிமுக  பொதுக்குழுவில்  நீக்கி நடவடிக்கை எடுத்ததை எதிர்த்தும், ஓபிஎஸ், இபிஎஸ் தலைமைக்கு எதிராகவும், சசிகலா தரப்பில்  சென்னை சிட்டி சிவில் போர்ட்டில் கடந்த 2017ம்ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தக்கட்டவிசாரணை மார்ச் 15ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ம். அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது என்றார்,

மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங் மெஷின் தருவதாக வெளியாகி வரும் தகவல்கள் உண்மை இல்லை என்று மறுப்பு தெரிவித்துடன், புதுச்சேரியில், நாராயணசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், அதிமுக எதிர்த்து வாக்களிக்கும் என்றார்.

More articles

Latest article