சென்னை:

மிழக சட்டசபையில் 2017-18-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார்.

அப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரன் குறித்து பேசியதும், சபையில் அமளி ஏற்பட்டது. குற்றவாளிகளான அவர்களது பெயரை நீக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து நிதி யமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

 

பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை சட்டசபையில் புகழ்வது அவை மரபுக்கு எதிரானது. சசிகலா, தினகரன் ஆகியோரின் பெயர்களை அமைச்சர் கூறியது தவறான செயல். எனவே, அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால், சபாநாயகர் அதற்கு மறுத்து விட்டார் என்றும்,

பட்ஜெட் தாக்கலின் போது அனைத்து அமைச்சர்களும் அவையில் இருக்க வேண்டும் என்பது மரபு ஆனால் 4 அமைச்சர்கள் இன்று அவைக்கு வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.