பட்ஜெட்:’புதிய மொந்தையில் பழைய கள்’ ஸ்டாலின்

Must read

சென்னை,

ன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றார் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,  ’புதிய மொந்தையில் பழைய கள்’ என்பது போல ஏற்கனவே பல பட்ஜெட்டுகளில் கூறிய திட்டங்களை மீண்டும் கூறியுள்ளனர் என்றார்.

மேலும்,  2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து 3 லட்சம் கோடியை தாண்டி செல்கிறது.

மாநிலத்தின் மொத்த வருவாயை விட கடனுக்கான வட்டி அதிகமாக உள்ளது. இதனால், மிகப் பெரிய கடனாளி என்ற சாதனையை தமிழகம் படைத்துள்ளது.

பட்ஜெட் உரையில் புதிய மின் திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு தெரிவித்தார்.

More articles

Latest article