சென்னை,

திமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஒபிஎஸ் அணியினர் சில கோரிக்கைகளை டிமாண்டாக வைத்துள்ளனர்.

இரு அணியினரும் ஒருவர் மீது ஒருவர் நக்கலும், நையாண்டியும் செய்து வருகின்றன நிலையில் தற்போது ஓபிஎஸ் அணியினிரின் நிபந்தனை கட்சி ஒன்றுபடு முடியாது என்பதையே காட்டுகிறது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்தில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் ஓ.பி.எஸ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி,

ஓபிஎஸ்  ஒரு தர்ம யுத்தத்தை துவங்கினார். அந்த தர்ம யுத்தத்தில் பிரதானமாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஜெயலலிதா மரணம் மீது சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும், சசிகலா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதுதான்.

இதன் அடிப்படையில் தினகரன் குடும்பத்தை கட்சியிலிருந்து ஒதுக்குவதாக ஆட்சியில் இருப்ப வர்கள் தெரிவித்தார்கள்.  அதன் காரணமாகவே இது, தங்களின்  தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. ஆனால் தொடர் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே பேச வந்துள்ளோம்.

தற்போது,  ஆட்சியில் இருப்பவர்கள் சசிகலாவை, அதிமுக பொதுச்செயலாளர் எனவும் ,டிடிவி தினகரனை அதிமுக துணைப் பொதுச் செயலாளர் எனவும் குறிப்பிட்டு டெல்லி தேர்தல் ஆணையத்தில் பிரமாண வாக்குமூலம் சமர்ப்பித்துள்ளனர். இவை அனைத்தையும் அவர்கள் திரும்பப் பெற வேண்டும்.

அது மட்டுமல்லாமல், சசிகலா மற்றும் தினகரனிடம் ராஜினாமா கடிதம் பெறுவது மட்டுமின்றி, அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட வேண்டும்.

ஜெயக்குமார் போன்ற அமைச்சர்கள் தான் தோன்றித்தனமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

அதன்பிறகு கட்சியை வழி நடத்தும் குழுவினர் உதவியோடு பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.