காங்கிரசில் சசிகலா புஷ்பா…? இளங்கோவன் பேட்டி!

Must read

 
 மதுரை:
திமுக எம்.பி. சசிகலா புஷ்பா காங்கிரசில் இணைய போகிகிறாரா என்பது பற்றி எனக்கு தெரியாது என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர்  பதவி வேண்டாம் என்றும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
evks
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிந்தபிறகு, அவர்மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளால் கடந்த ஜூன் 25ந்தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
சொந்த பயணமாக மதுரை, ஈரோடு வந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதிலில்,
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி வேண்டாம் என்றுதான் ராஜினாமா செய்தேன். எனவே, மீண்டும் தலைவர் பதவி வேண்டாம். சட்டப் பேரவைத் தேர்தலில் நான் இன்னும் சரியாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று கட்சித் தலைமை நினைத்தது. ஆகவே எனது மாநிலத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தேன். அதை கட்சித் தலைமையும் ஏற்றுக் கொண்டது.  ஆகவே மீண்டும் கட்சித் தலைமை பதவியை ஏற்பதாக வரும் செய்திகள் சரியல்ல.
மேலும், அதிமுகவை சேர்ந்த சசிகலா புஷ்பா எம்.பி., டெல்லி விமான நிலையத்தில்  திமுக எம்.பி. திருச்சி சிவாவை அடித்தது, தற்போது அதிமுக தலைமையை மீது புகார் கூறியத, காங்கிரசில் இணைகிறார் என்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்த இளங்கோவன்,
sasi
அவர் அவரது கட்சி தலைமை தன்னை தாக்கியதாக புகார் கூறி உள்ளார்.  அதனால் . அவருக்கு மத்திய அரசு பாதுகாப்பளிக்க வேண்டும் என்றார்.
மேலும் அ.தி.மு.க.,வும், வன்முறையும் வேறு வேறு அல்ல. இதுபோன்ற நிகழ்வுகள் அவர்களுக்கு புதிதும் அல்ல.
ஏற்கனவே  நீதிமன்ற வளாகத்துக்குள், சுப்பிரமணியசாமியை, வன் முறையால் வரவேற்றவர்கள் அதிமுகவினர்.   தர்மபுரியில், மூன்று மாணவியர்களை  எரித்துக் கொன்றவர்கள்.  பெண் எம்.பி.,யை அடிப்பதெல்லாம், அ.தி.மு.க.,வில் வழக்கமாக நடப்பதுதான்.
மற்றபடி, சசிகலா புஷ்பா, காங்கிரசில் இணையப் போவது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
ஆனால் சசிகலா புஷ்பா எம்.பி.க்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், முக்கிய தலைவருமான குலாம்நபி ஆசாத் பேசியது குறிப்பிடத்தக்கது.
 

More articles

Latest article