அதிமுக பேச்சாளரான நாஞ்சில் சம்பத், அக் கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைதியாக இருந்துவந்தார். அவர் திமுக வில் சேரப்பாவதாக தகவல் வெளியானது. ஆனால் அவரது சார்பாக அவரது மகள், இச் செய்தியை மறுத்தார்.
இந்த நிலையில், அதிமுக கட்சி, அவருக்கு வழங்கிய இன்னோவா காரை திரும்ப கட்சியிடம் ஒப்படைத்தார்.
மேலும், “பொதுச் செயலாளராக பதவி வகிக்க சசிகலாவுக்கு தகுதி இல்லை. அக்கட்சியின் தலைமை பொறுப்பு வகிக்க அவருக்கு எந்த தகுதியும் கிடையாது. அதிமுகவும், தமிழக அரசும் தரை தட்டிய கப்பல்போல் ஆகிவிட்டன. . அண்ணா ஏற்றிய மாநில சுயாட்சி தீபம் அணைந்தே போய்விட்டது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார் நாஞ்சில் சம்பத்..