இன்னோவாவை திரும்ப ஒப்படைத்தார் சம்பத்! திமுகவுக்கு தாவ திட்டமா?

Must read

சென்னை,

ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை திருப்பி ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத். இதன் காரணமாக அவர் திமுகவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மதிமுகவில் இருந்து பிரிந்துசென்று, அதிமுகவில் ஐக்கியமாகிய நாஞ்சில் சம்பத் தற்போது அமைதியாக உள்ளார். அவர் விரைவில் திமுகவுக்கு தாவுவார் என கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சசிகலா அதிமுகவுக்கு தலைவராக பொறுப்பேற்று உள்ளார். சசிகலா தலைமையை அதிமுக தொண்டர்கள் மற்றும் பேச்சாளர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலாவின் தலைமையை பிடிக்காத,  அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத்,  அவருக்கு ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட இன்னோவா காரை கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டார்.

இதன் காரணமாக அவர் திமுகவுக்கு போவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

2012ம் ஆண்டு  மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த  நாஞ்சில் சம்பத்க்கு, அப்போது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா அவருக்கு இன்னோவா காரை பரிசாக கொடுத்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுக தலைமையை ஏற்றுள்ளார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை அதிமுக தலைமையிடம் ஒப்படைத்து விட்டார். இது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில்…

நாஞ்சில் சம்பத்  தனது பேஸ்புக் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

இன்று தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளதாவது:

2012 டிசம்பர் 16ம் தேதி இயக்க பிரச்சா ரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னி டத்தில் ஒப்படைக்கப்பட்டது. அம்மா அவர்கள் சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள்.

பிரசாரத்துக்கு மட்டுமே அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தை தவிர என்னு டைய சொந்த உபயோகத்திற்காக ஒருநாள்கூட பயன்படுத்தவில்லை. பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும்.

இன்னோவா சம்பத் பழி… இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை, வீணாக அதை வைத்து கொண்டு இன்னோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்கு இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமை கழகத்தில் ஒப்படைத்துவிட்டேன்.

என்று கூறியுள்ளார். 

நாளை திமுக பொதுக்குழு  கூடுகிறது. இந்த நேரத்தில் சம்பத் காரை திருப்பி கொடுத்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article