குடிக்க பணம் தராததால் பெற்றோரை கட்டிப்போட்டு சித்திரவதை செய்த மகன்!

Must read

தேனி:

மதுக்குடிக்க பணம் தராத தாய் தந்தையின் கை கால்களை கட்டிப் போட்டு சித்தரவதை செய்த மகனை, பொதுமக்கள் பிடித்து காவல்துறை வசம்  ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த வடகரை ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்துவருபவர் மணிகட்டி.  இவரது மனைவி ஈஸ்வரி.

இந்த தம்பதியின் மகன் கார்த்திக் ராஜா. மதுவிற்கு அடிமையானவர். எந்த வேலைக்கும் செல்லாமல்  எப்போதும் மது போதையிலேயே இருப்பார்.

இதனால் மதுகுடிக்க பணம் கேட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகறாறு செய்வார். அவர்கள் அடித்து உதைத்து சித்திரவதையும் செய்வார். அப்போது பெற்றோர் அலறித்துடிப்பார்கள். அக்கம்பக்கத்தினர் வந்து காப்பாற்றுவார்கள். இது வழக்கமாக நடப்பது.

இந்த நிலையில் கார்த்திக் ராஜா, நேற்றும் குடிக்க பணம் கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து அவர்களை கயிறால் கட்டிப்போட்டு சித்திரவைதை செய்துள்ளார். இருவரும் அலறியிருக்கிறார்கள். சத்தத்தைக் கேட்டுஅருகில் இருந்தவர்கள் வந்து கட்டப்பட்ட கை, கால்களை அவிழ்த்து அவர்களை மீட்டனர்.

மேலும், மதுகுடிக்க பணம் கேட்டு பெற்றோரை அடிக்கடி சித்திரவதை செய்யும் கார்த்திக்ராஜாவை  பிடித்து, காவல்துறை வசம் ஒப்படத்தனர்.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article