சென்னை,
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து பரபரப்பான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
அதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்றும் வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்து உள்ளார்.
இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து, ஓபிஎஸ் அணியினிருக்கு கட்சியில் பதவிகள் வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து துணை முதல்வராக ஓபிஎஸ் பதவி ஏற்க உள்ளார். அவருடன் மா.பா. பாண்டியராஜன் அமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.
இந்நிலையில், ஓபிஎஸ்-ன் அணியினரின் முக்கிய கோரிக்கையான சசிகலா கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது.
கட்சியின் துணைஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் எம்.பி., இந்த தகவலை கட்சியினர் முன்னிலையில் அதிமுக தலைமை கழகத்தில் இணைப்பின்போது அறிவித்தார்.
சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிமுகவின் பொதுக்குழு கூட்டி சசிகலா பொதுச்செயலளர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறி உள்ளார்.
இது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால், அதிமுக ஆட்சி கவிழும் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.