பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் தனக்கு ஏ.சி. அளிக்க வேண்டும் என்று சசிகலா கோரினார். ஆனால் அதற்கு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த முறை ஜெயலலிதாவுடன் சிறையில் இருந்தபோது, ஏர்கூலர் அளிக்கப்பட்டிருந்தது.

அதே போல, வீட்டிலிருந்து உணவு கொண்டுவந்து தர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார்.

அதே நேரம்,  தன்னையும், இளவரசியையும் ஒரே அறையில் அடைக்க வேண்டும் என்ற சசிகலாவின்  கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

மேலும், தான் சர்க்கரை நோயாளி என்பதால் மெத்தை வழங்க வேண்டும் என்றும், சுடுதண்ணீர்,  மற்றும் மேற்கத்திய பாணி டாய்லெட் ஆகிய வசதிகள் வேண்டும் என்றும், தொலைக்காட்சி  பெட்டி வேண்டும் என்றும் சசிகலா கோரினார். இவை அனைத்துக்கும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.