சென்னை,

திமுக பொதுச்செயலாளராக  தேர்வாகி உள்ள சசிகலாவுக்கு உச்சநீதி மன்றம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளதால், அதிமுக தலைமை அலுவலகத்தை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக கட்சி யார் கைக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக அதிமுகவினரிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன்,  மூவரும் உடனே சரணடையவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக கட்சி யார் கைக்கு செல்ல இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு செல்கிறது என்றும் கேள்வி எழுந்துள்ளது.

அலுவலகத்தை கைப்பற்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முயற்சி செய்வதாகவும் தகவல்கள் உலா வருகிறது.

தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா பாதுகாப்புக்கு உள்ள  தனியார் பாதுக்காப்பு வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.