சிகலா உள்ளிட்டோருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில், தலா நான்காண்டு சிறைத்தண்டனையும், தலா பத்துகோடி அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது கர்நாடக தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தனது தலைமையில் ஆட்சி அமைக்க விரும்பிய சசிகலாவின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்விக்கு சட்ட வல்லுனர்கள் சொல்லும் பதில் இதுதான்:

“தவிர  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது. இதுதான் இறுதித் தீர்ப்பு.

நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது. ஆகவே முதல்வர் பதவி என்பது இனி அவருக்கு கனவுதான்.”

அரசியல் ரீதியாக சசிகலாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

”தனது குடும்ப உறுப்பினர்கள் யாரையேனும் முதல்வர் பதவிக்கு சசிகலா முன்னிறுத்த விரும்பலாம். ஆனால் இன்று அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களே அதை விரும்ப  மாட்டார்கள்.

அல்லது, தனது சொல்பேச்சு கேட்கும் ஒரு எம்.எல்.ஏ.வை முதல்வராக அவர் முன்னிறுத்தலாம்.

அதையும்கூட எம்.எல்.ஏக்கள் எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்பது சந்தேகமே. ஏற்கெனவே சசிகலா பக்கம் இருந்த பொன்னையன் ஓ.பி.எஸ். பக்கம் சென்றதை கவனிக்க வேண்டும். தீவிர சசிகலா ஆதரவாளராக இருந்தார் பொன்னையன். “ஜெயலலிதா தனது வாரிசாக சசிகலாவைத்தான் முன்னிறுத்தினார்” என்று ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தில் நாமினியாக சசிகலாவை ஜெயலலிதா பதிந்ததை சொன்னவர் இவர்.  இதை அப்போதே எவரும் ஏற்கவில்லை.

அந்த அளவுக்கு தீவிர சசிகலா விசுவாசியாக தன்னை காட்டிக்கொண்டார். சசிகலா அணியில் இருந்த அ.தி.மு.க. அவைத்தலைவர், ஓ.பி.எஸ். பக்கம் சென்றதும், அவரை நீக்குதாக சசிகலா அறிவித்தார். அந்த நிலையில் தன்னை அவைத்தலைவர் ஆக்குவார் என்ற எதிர்பார்ப்பு பொன்னையனுக்கு இருந்தது. ஆனால் செங்கோட்டையனை அவைத்தலைவராக அறிவித்தார் சசிகாலா. ஆகவே பொன்னையன் ஏமாற்றத்துக்குள்ளானார். ஓ.பி.எஸ். பக்கம் தாவினார்.

ஆகவே தற்போது வேறு ஒரு எம்.எல்.ஏ.வை முதல்வராக சசிகலா முன்னிறுத்தினால், மற்ற பல எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அடைந்து ஓ.பி.எஸ்.பக்கம் செல்லக்கூடும்.

அதனால் அரசியல் ரீதியாகவும் சசிகலா தலையெடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்.”

–    இவ்வாறு அரசியல் தரப்பில் பேசப்படுகிறது.