தற்போதைய சூழ்நிலையில் சசிகலாவை ஆட்சிஅமைக்க முடியாது என்று ஆளுநர், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியிருப்பதாக, ஊடகங்களில் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.
தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.கவில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் அதிகாரப்போட்டி நடந்துவருகிறது.
சமீபத்தில் அக் கட்சி எம்.எல்.ஏக்கள் கூடி, சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். இத் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதமும் கொடுத்தார்.
இதனால் சசிகலா முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், திடீரென, தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறப்போவதாகவும், சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கப்போவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
இதையடுத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை, சென்னை கூவத்தூரில் உள்ள இரு நட்டத்திர விடுதியில் சசிகலா தங்கவைத்திருக்கிறார்.
நேற்று கவர்னரை சந்தித்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்களுக்கே அதிக எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது என தெரிவித்தனர்.
இது குறித்து நேற்று மத்திய அரசுக்கு ஆளுனர் வித்தியாசாகர் அறிக்கை ஒன்றை அனுப்பினார்.
இந்த நிலையில் இன்று இரவு அடுத்த அறிக்கயை வித்தியாசாகர் அனுப்பியிருப்பதாகவும் அதில், தற்போது நிலவும் சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று அவர் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் சசிகலா தரப்பி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.