சென்னை:

நேற்று தமிழக கவர்னர் வித்தியாசாகரை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் சந்தித்தனர். இருவரும், தங்களுக்கு முழு மெஜாரிட்டி இருப்பதாகவும் சட்டசபையில் நிரூபிப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று ஒரு அறிக்கையை கவர்னர் வித்தியாசாகர் மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். இன்று இரவு இன்னொரு அறிக்கையை அனுப்பியுள்ளார்.

மூன்று பக்கம் உள்ள அந்த அறிக்கையில் தற்போதைய சூழலை விளக்கி, இப்போது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து  இன்று இரவு அல்லது நாளை, தமிழக சட்டசபை சஸ்பெண்ட் செய்யப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.