இன்று இரண்டாவது முறை கூவத்தூர் சென்று அங்கு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பத்திரிகை ஊடக நண்பர்களே நீங்கள் இப்போது பார்க்க வேண்டும். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் அடைத்து வைக்கவில்லை. நீங்கள் அனைவரும் கண்கூடா பார்க்கிறீர்கள். ஒரு நல்ல குடும்பமாக இங்கே (எம்.எல்.ஏக்கள்) இருக்கிறார்கள். இதை நீங்கள் பார்க்க வேண்டும்.
இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம் சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பது பொய் என்பதை தெரிந்துகொண்டிருப்பீர்கள். இத்தனை ஊடகக்காரர்களும் பத்திரிகைக காரரர்களும் பார்த்துக்கொள்ளுங்கள்..
அவர்கள் தங்கள் மனதில் உள்ளதைச் சொல்லிக்கொண்டு அவர்கள் அதமுகவுக்கு எந்த வித சின்ன இந்த அரசுக்கு சங்கடம் வந்துவிடக்கூடாது என்பதில் எவ்வளவு முனைப்புடன் இருக்கிறார்கள். என்பதை பார்த்தீர்கள்.
ஊடகங்களில் சிலர்… இங்கிருந்து போன சிலர், சில எதிரி கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.அது இல்லை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
எங்கள் கழக கண்மணிகள் ஒன்றாக இங்கே. இருக்கிறார்கள். அவர்களது இல்லங்களுக்கு தொலைபேசி வாயிலாகவும் டெலிபோனில் பேசியும் , சின்ன குழந்தை உள்ள குடும்பத்தாரும் இருக்கிறார்கள்.. வந்தவுடன் சொன்னார்கள் உங்களது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு போய்விடுவோம் என்று. இது மாதிரியான செய்திகளை வந்தவுடன் சொன்னார்கள்..
ஆனாலும் அவர்கள் “உறவினர்களிடம் சொல்லி எங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ள சொல்லியிருக்கிறோம்” என்று சொன்னார்கள்.
கட்சி மீது இவர்கள் எந்த அளவுக்கு பாசத்துடன் இருக்கிறார்கள் என்பதை நினைத்து என் கண்களில் கண்ணீர் வந்தது. இப்போது எம்.எல்.ஏக்கள் சுந்திரமாக இருந்ததையும் பார்த்ததையும் பார்த்திருப்பீர்கள்” என்று சசிகலா பேசினார்.
பிறகு அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “கவர்னர் தாமதிப்பதற்கான காரணம் தெரியவில்லை. உங்களைப்போலத்தான் நானும். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கேட்கிறார்கள்.. வரட்டும் பார்க்கலாம். அதற்குள் ஏன் அவசரப்படறீங்க? அழைக்காமல் தடுக்கும் , தாமதிக்க வைக்கும் சக்தி எது என்பது உங்களுக்கே தெரியும்” என்றார்.
அதற்கு ஒரு செய்தியாளர், “அது எந்த சக்தி என்று நீங்களே சொன்னால் நன்றாக இருக்கும் ” என்று கேட்டார்.
அதற்கு சசிகலா, “ஏன்.. நீங்கள் எல்லோருமே புத்திசாலிகள்தானே..உங்களுக்கே தெரியாதா” என்றார்.
மேலும் சசிகலா, “தற்போது உள்ள சூழலால் என்னை முதல்வர் ஆக்க முடியாது என ஆளுநர் அறிக்கை அனுப்பியதாக சொல்லப்பட்டது பொய் என ஆளுநர் அலுவலகமே தெரிவித்துவிட்டது. இதுபோன்ற பொய்ச்செய்திகளை இங்கிருந்து சென்ற சிலரும், எதிரி கட்சிகளும் பரப்புகிறார்கள்” என்று சசிகலா பதில் அளித்தார்.