சென்னை,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் அதிகாரப்போட்டி ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆசைப்பட்டதே அனைத்திற்கும் காரணம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து, மேலும் குழப்பம் ஏற்படக்கூடாது என்றுதான் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார்.

இன்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஜெயலலிதாவை மறைவை தொடர்ந்து, சசிகலா  முதல்வராகும் தமது ஆசையை வெளிப்படுத்திய பிறகுதான் பிரச்சனை ஏற்பட்டது என்று கூறினார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க தாம் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட வில்லை என்றும்,  அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது தேவையான வசதி இல்லையென்றால் அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்கலாம் என தம்பி துரையிடம் சொன்னேன்.. அவரும் கூறினார். அதற்கு, இங்கு சிகிச்சை நல்ல முறையில் உள்ளது .வெளிநாடு தேவையில்லை என சசிகலா சொன்னதாக, தம்பிதுரை என்னிடம் கூறினார்.

ஜெயலலிதா உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்த தகவல்களை நம்பினோம் என்றார்.

ஆகவே, தான் முதல்வராக இருந்தபோது விசாரணை கமிஷன் வைக்க வேண்டுமென கூறினேன். மூன்றாம் முறையாக முதல்வராக ஆன பிறகு தமக்கு ஏற்பட்ட அவமானத்தை தான் நான் 10 சதவீதம் கூறினேன். 90 சதவீதத்தை புதைத்து விட்டேன்.

மேலும், அரசியல் லாபத்திற்கு ஸ்டாலின் கேள்விக்கு பதில் தர முடியாது.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துள்ளது. இந்த தேர்தலிலும் திமுக படுதோல்வியடையும்.அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவில்லை.  மக்கள் தெளிவாக உள்ளார்கள். மக்கள் எங்களுக்கு வரவேற்பு தெரிவிக்கின்னர்.

தினகரன் ஆர் கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியி லிருந்து  இறக்கப்படுவார் என்றும் கூறினார்.