கடலில் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் : மாணவர்கள் கைது

சென்னை :

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். 11க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

கடும் போலீஸ் கண்காணிப்பையும் மீறி மாணவர்கள் கடலில் இறங்கி போராடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஹைட்ரோகார்பன் திட்டம் கைவிடும்வரை போராட்டம் தொடரும் என்றும் அப்போது தெரிவித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், விவசாயிகளுக்கு ஆதரவான தங்களது போராட்டம் மேலும் வலுப்பெறும் என உறுதிபட தெரிவித்தனர்.

தங்களது போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.

சென்னை  போராட்டத்தை தொடர்ந்து மதுரை, திருச்சி, கோவை நகரங்களில் மாணவர்கள் போராட தொடங்கியுள்ளனர்.

 

 

.


English Summary
The fight for tamil peasants issue, students arrested