சென்னை:   மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்காமல் தடுத்தவர்களை அவரது ஆவி சும்மா விடாது தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் என்றவர்,  அணியாக வந்தாலும், தனியாக வந்தாலும் அதிமுக கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் உறுதி மொழியேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 13 வருடம் திமுகவை வனவாசதிற்கு அனுப்பி வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்று கூறினார்.

அதிமுகவை இணைப்பேன் என சசிகலா கூறியதற்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுகவை இணைக்க சசிகலா யார், அவருக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்மந்தம் என கேள்வி எழுப்பினார்.

சசிகலா, ஒ.பி.எஸ்., டிடிவி வேண்டுமென்றால் ஒன்றாக இணைய பணி செய்யலாம். தேர்தல் பணிகளை ஒ.பன்னீர் செல்வம் முன்னெடுப்பதாக சொல்வது எள்ளி நகையாட கூடிய ஒரு கருத்து என பதில் அளித்தார்.

2024 தேர்தல் கூட்டணி குறித்த செய்தியாளரின்  கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், எடப்பாடி பழனிச்சாமி தெளிவாக கூறியது போல எங்கள் தலைமையில் தான் கூட்டணி. தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் ஒதுக்கும் இடம் தான். எங்களை யாரும் கட்டாய படுத்த முடியாது. கட்சியிலும், கூட்டணியிலும், தினகரன், ஓபிஸ், சசிகலா என யாரையும் சேர்த்து கொள்வதில்லை என திட்டவட்டமாக கூறினார்.

தொடர்ந்து பேசியவர், 2024ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். மக்களிடம் இந்த ஆட்சி மீது அதிருப்தி உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக ரூ.1000 திமுக அரசு கொடுத்திருக்கிறது. கரும்பு கொடுக்கவில்லை என்றால் விவசாயிகள் கரும்பை எங்கு சென்று விற்பனை செய்வார்கள். கரும்பு விவசயிகளுக்கு அரசு பெரும் துரோகம் செய்கிறது என விமர்சித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அதிமுக வலியுறுத்துகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநாடு சென்று சிகிச்சை எடுக்க விரும்பவில்லை என வடிகட்டுன பொய்யை சசிகலா கூறுகிறார். ஆறுமுக சாமி ஆணை அறிக்கைபடி (சி.ஐ.ஜி) செய்ய ஜெயலலிதா ஒப்புக்கொண்டார். ஆனால் ஏன் இவர்கள் அறுவை சிகிச்சை செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். அன்றே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்திருந்தல் இன்று அவர் மீண்டு வந்து 2021ல் ஆட்சியை பிடித்திருபார்.

இவ்வாறு கூறினார்.