சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செய்து, தனது ஆதரவாளர் களுடன் உறுதிமொழி எடுத்தார். அதுபோல, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்து மலர்வளையம் வைத்தஅஞ்சலி செலுத்தியதுடன் தனது அதரவாளர்களுடன் உறுதி மொழி எடுத்தார். தொடர்ந்து எம்.ஜிஆர் குடும்பத்தினரும் வந்து மரியாதை செய்தனர்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் 35வது நினைவுநாள் இன்று (டிச.24) தமிழ்நாடு முழுவதும் அவரது ஆதவாளர்கள் மற்றும் ரசிகர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவிலுள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து,  எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர்  குடும்ப அரசியல் நடத்தி கொடி பிடிக்கும் தொண்டனை துச்சம் என நினைப்பது திமுகவின் வாடிக்கை. திமுகவை வீழ்த்துவதில் வெற்றி கண்ட எம்ஜிஆர் காட்டிய பாதையில் திமுகவை வீழ்த்துவோம் என அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

அதைத்தொடர்ந்து, ஓ பன்னீர்செல்வம் தனதுஆதரவாளர்களுடன் வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவர்களும் உறுதி எடுத்தனர்.

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்துள்ளதால், இரு  அணியினரும் தனித் தனியாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக எம்ஜிஆர் குடும்பத்தினர் சென்னை மெரினாவில் உள்ள அவரின் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அந்த படங்கள் இப்போது பரவலாக பரவி வருகிறது.