டில்லி :
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த ஜூலை 7ந்தேதி உச்சநீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை டில்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சசிதரூரின் மனைவி, 51 வயதான சுனந்தா புஷ்கர் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இரவு, டெல்லியில் உள்ள 5ஸ்டார் ஓட்டலில் மர்ம மான முறையில் இறந்து கிடந்தார்.
பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தரார் என்பவருடன் சசிதரூர் கொண்டிருந்த நெருக்கம் காரணமாக, சுனந்தா மெஹர் தரார் இடையே நடைபெற்ற டுவிட்டர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மறுநாள் சுனந்தா இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலை யில் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “நம் நாட்டில் குற்ற வழக்கு நடைமுறைகள் எந்த அளவுக்கு தாமதம் வாய்ந்தவை என்பதற் கும் பணம் மற்றும் செல்வாக்கு மிகுந்த வர்கள் இவற்றை எந்த அளவுக்கு சீர்குலைக்கலாம் என்பதற்கும் சுனந்தா வழக்கு சிறந்த உதாரணம் ஆகும்.
இந்த வழக்கை, நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும். இக்குழுவில் புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை, உளவுத் துறை, டெல்லி காவல்துறை அதிகாரிகள் இடம் பெற வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் சுப்பிரமணியன் சுவாமி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான தகவல்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நீங்கள் தாக்கல் செய்த மனு பொதுநல மனுவா ? அல்லது அரசியல் மனுவா ? என்றும் டில்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.