‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…..!

Must read

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கிறார். நடிகர் கலையரசன், ஜான் கொக்கென், ஷபீர், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். முரளி ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா படத்தொகுப்பு செய்கிறார். ராமலிங்கம் கலை பணிகள் மேற்கொள்கிறார். அன்பறிவு சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் என அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாத நிலையில் ‘சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினர் நேரடியாக ஓடிடியில் வெளியிடவுள்ளனர். இந்தப் படத்தின் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இப்படம் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

 

More articles

Latest article