‘சரிலேறு நீக்கவேறு படத்தின் வெற்றிக்குப் பிறகு மகேஷ் பாபு
இயக்குநர் பரசுராம் இயக்கும் ‘சரக்கு வாரி பாட்டா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இதில் மகேஷ் பாபுவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மகேஷ் பாபுவுடன் கீர்த்தி நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

தமன் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ள இந்தப் படத்தை 14 ரீல்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன.

அண்மையில் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் 2022-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி வெளியீடு எனவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று (ஆக. 09) மகேஷ் பாபு பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீஸரை காலையில் 9:09 மணிக்கு படகுழு வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், நேற்று இணையத்தில் டீஸர் லீக்காகிவிட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் அதிகாரபூர்வமாகவே டீஸரை வெளியிட்டுவிட்டது படக்குழு.

https://youtu.be/2cVu7KZxW3c