தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர் விஜயகுமார் இயக்கத்தில் உருவாகும் படம் ‘அழகிய கண்ணே’ .

லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.

முழு படப்பிடிப்பும் முடிந்துள்ள நிலையில், இப்படத்தில் விஜய்சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான படப்பிடிப்பை சில நாட்களுக்கு முன்புதான் அவர் முடித்துக் கொடுத்துள்ளார்.