நிறவெறியை தூண்டும் விதமாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபரஸ் அகமது நான்கு போட்டிகளில் பங்கேற்க ஐசிசி தடை விதித்துள்ளது.

captain

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட், 5ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த 22ம் தேதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா 5விக்கெட்டுகள் வித்யாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. 4விக்கெட்டுகளை கைப்பற்றி 69 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்க வீரர் பெஹல்குவே போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையே மைதானத்தில் பெஹல்குவே பேட்டிங்க் செய்தபோது பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ர்ஸ் அகமது ‘கருப்ப’ என அவர்களின் நிறத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு தெரிய கூடாது என்பதற்காக உருது மொழியில் ‘ Abey Kaale’ என பெஹல்குவேயின் நிறத்தை குறிப்பிட்டு சர்ஃப்ரஸ் அகமது கூறியது பதிவானது.

இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து தான் பேசியதற்கு சர்ஃப்ரஸ் அகமது மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இருப்பினும் நிறவெறியை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிறவெறியை தூண்டும் விதத்தில் பேசியதற்காகவும், நிறவெறி தடுப்பு விதியை மீறியதற்காகவும் சர்ஃப்ரஸ் அகமது 4 போட்டிகளில் விளையாட ஐசிசி நிர்வாகம் தடை விதித்தது.

இதன் காரணமாக இன்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் சோயிப் மாலிக் கேப்டனாக செயல்பட்டார்.