சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சியின்  மேயர் பதவி போட்டிக்கு சரவணன் போட்டியிட உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சரவணன் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் கும்பகோணம் மாநகராட்சியின் 8வது வார்ட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள திமுக கூட்டணி, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், 2 துணைமேயர், 6நகராட்சி தலைவர் உள்பட 37 பதவிகளை ஒதுக்கி அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இநத் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவிக்கு சரவணன் என்பவர் போட்டியிடுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளது. சரவணன் ஆட்டோ டிரைவராக உள்ளார். அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றவர். இவர் கும்பகோணம் மாநகராட்சியின் 8வது வார்ட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

கும்பகோணம் மாநகராட்சி துணை மேயராக திமுக சார்பில் தமிழழகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் சேலம்  மாநகராட்சியுன் துணைமேயர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உறுப்பினர் மற்றும், 6நகராட்சி தலைவர் உள்பட 37 பதவிகளுக்கு போட்டியிடும் நபர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான பட்டியல் இன்று மாலை வெயியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுக சார்பில் போட்டியிட இருப்பவர்  திருமதி. மகாலட்சுமி யுவராஜ். இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த பொறியாளர் பணியிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டவர்.

அதுபோல சேலம் மாநகராட்சி மேயராக போட்டியிட இருப்பவர் ஏ.ராமச்சந்திரன்.

ஒரு மேயர், 2 துணைமேயர், 6நகராட்சி தலைவர் உள்பட 37 பதவிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக…