சென்னை:
ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலன் அண்ணாச்சி, தற்போது நரம்பு நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வருவதால், தான், கோர்ட்டில் சரணடைய அவகாசம் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
ஓட்டல் சரவணபவன் ஊழியரான பிரின்ஸ் சாந்தகுமார் (ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் அதிபர் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை பூந்திமல்லி நீதிமன்றம் கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதி மன்றமும் கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்து, ராஜகோபால் சரணடைய உத்தரவிட்டது.
அதற்கான காலக்கெடு ஜூலை 7ந்தேதியுடன் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது உடல்நலம் இல்லாமல் படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் ராஜகோபால் அண்ணாச்சி, தனது உடல்நிலையை காரணம் காட்டி, சரணடைய கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் ராஜகோபால் தரப்பு முடிவு செய்துள்ளனர்.