சென்னை:

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளளராக தீபலட்சுமி அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் பெயரை அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ந்தேதி  நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது, பணப்பட்டுவாடா காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, அங்குஆகஸ்டு 5ந்தேதி தேர்தல்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட, கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடக்கவிருக்கிற வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அன்புத்தங்கை தீபலட்சுமி போட்டியிடுவார்.

கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டு மெனவும், மாநிலம் முழுவதும் உள்ள உறவுகள் அனைவரும் இக்களத்தில் பங்கேற்று தங்களது அளப்பெரிய பங்களிப்பைச் செலுத்தி வெற்றிக்கு உழைக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு கூறியுள்ளார்.