சரவணபவன் அண்ணாச்சி ராஜகோபால் ஜீவஜோதி மீது கொண்ட காமமும், கணவனை கொலை செய்ததற்காக ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்டத்தையும் மையப்படுத்திய ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.
ஜோசியத்தின் மீதிருந்த நம்பிக்கையில் தனது ஹோட்டலில் மேனேஜராக இருந்தவரின் மகள் ஜீவஜோதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். ஜீவஜோதி திருமணமானவர். ஆனாலும், ராஜகோபால் தனது ஆசைக்கு இணங்க ஜீவஜோதியை வற்புறுத்தினார்.
கடைசியில், 2001-ல் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டார். 18 வருடம் நீண்ட இந்த கொலை வழக்கில் ராஜகோபால் குற்றவாளி என ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம்.
2019-ல் போலீஸில் சரணடைந்தவர் சில தினங்களில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.
இந்தக் கதையை பாலிவுட்டின் ஜங்க்லி நிறுவனம் திரைப்படமாக எடுக்கிறது. தோசை கிங் ராஜகோபாலுக்கு எதிரான ஜீவஜோதியின் சட்டப் போராட்டத்தை படமாக எடுப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.