1972-ல் ஏவிஎம் தயாரித்த காமெடி திரைப்படம் சாசேதான் கடவுளடா. முத்துராமன் நடித்த இதன் ரீமேக்கை ஆர்.கண்ணன் இயக்குவதாக கூறப்படுகிறது.

இதை இந்தக் காலத்துக்கு ஏற்றபடி ஆர்.கண்ணன் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. முத்துராமன் வேடத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் வேடத்தில் யோகி பாபுவும் நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

காசேதான் கடவுளடா படத்தை சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இவர் முதலில் இதை நாடகமாகத்தான் எழுதினார். முத்துராமன், மனோரமா என பலரும் அதில் நடித்திருந்தனர். நாடகம் வெற்றிகரமாக ஓடவே ஏவிஎம் அதனை படமாக்கியது. சித்ராலயா கோபுவே படத்தை இயக்கினார்.