வாஸ்து ஜோசியர் சந்திரசேகர் கொலை… மர்ம நபர்களுக்கு வலை…

Must read

மும்பையைச் சேர்ந்த பிரபல சரல் வாஸ்து ஜோசியர் சந்திரசேகர் குருஜி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பகல்கொட்டே-வைச் சேர்ந்த சந்திரசேகர் மும்பையில் பணிசெய்து அங்கேயே வசித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது உறவினர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஹூப்ளி வந்த அவர் அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

சந்திரசேகர் தங்கியிருந்த விடுதிக்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் ஹோட்டல் ரிசப்ஷனில் வைத்து அவரை சரமாரியாக வயிற்றில் குத்தி கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. கமராவில் பதிவாகியுள்ளது இதை வைத்து கொலை செய்தவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

More articles

Latest article