சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இதிகாலை முதல் தொடர்ந்து சாரல் மழை போல மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குதூகலமாக காணப்படுகின்றனர். அதே வேளையில் விஜயதசமி  வியாபாரம் படுத்துவிட்டதாக, சாலையோர வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், சைதாப்பேட்டை, பெரம்பூர், மாதவரம், இசிஆர், ஓஎம்ஆர் உள்பட பல பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.

இன்று விஜயதசமி விடுமுறை தினம் என்பதால், சாலையில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் கோவில் மற்றும் சுற்றுலா தலங்களக்க செல்வது பாதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் சாரல் மழை காரணமாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் மழையை கொண்டாடி வருகின்றனர்.

[youtube-feed feed=1]